Skip to main content

மிரட்டும் வேலை இங்கு வேண்டாம்-தன் புதிய எதிரிக்கு ட்ரம்ப் எச்சரிக்கை  

Published on 23/07/2018 | Edited on 23/07/2018
trump

 

 

 

 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கடந்த மே மாதம் கைவிட்டது. இதையடுத்து இவ்விரு நாட்டு அதிபர்களுக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. தற்போது அது போராக முடியும் என்ற அச்சம் பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் நேற்று ஈரான் அதிபர் ஹஸன் ரவுஹானி, பல்வேறு நாடுகளில் ஈரான் தூதராக இருப்பவர்களிடம் உரையாற்றினார். அப்போது கூறுகையில்," ஈரானுடன் போரிட அமெரிக்கா நினைத்தால் அது இதுவரை நடக்காத மோசமான போராக மாறும். போருக்கெல்லாம் தாய் போராக இருக்கும்.சிங்கத்தின் வாலை பிடித்து விளையாடாதீர்கள், மிஸ்டர் ட்ரம்ப். இதன் விளைவு வருத்தத்தில்தான் போய் முடியும்" என்று எச்சரித்தார்.

 

 

இதற்கு பதிலடியாக ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில்," அமெரிக்காவை எக்காலத்திலும் எச்சரிக்கவோ அச்சுறுத்துவோ நினைக்காதீர்கள். அப்படி செய்தால் வரலாற்றில் பலர் அனுபவித்த பின்விளைவுகளை நீங்களும் சந்திக்க நேரும். உங்கள் புத்திதவறிய மிரட்டல் வார்த்தைகளைப் பொறுத்துக்கொள்ளும் நாடல்ல அமெரிக்கா" என்று பதிலடியாக எச்சரித்துள்ளார்.   

 

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடன் இதுபோன்று காரசாரமாக ட்விட்டரில் எச்சரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.     

 

சார்ந்த செய்திகள்