Skip to main content

அவர் மட்டும் இல்லனா நான் இல்ல... உயிர் தப்பிய இந்தியர்...!

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இருவேறு மசூதிகளில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலியானதாகவும், 20 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 Christchurch terror attack


இந்த நிலையில் அந்த துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய ஃபைஸல் சயீத் என்பவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 100 சதுர அடி இருந்த மசூதியில் நாங்கள் அவர்கள் தொழுகை செய்துகொண்டிருந்தபோது. மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் மசூதியினுள் நுழைந்து சரமாரியாக சுடத் தொடங்கினார். 
 

இதுபோன்று எதிர்பாராத சமயத்தில் ஒரு சம்பவம் நடக்கும்போது நம் இதயம் படபடப்பினால், வழக்கத்தைவிட அதிகமாகத் துடிக்கும். அந்த நேரத்தில் நம்மால் எதுவும் செய்யவோ, யோசிக்கவோ முடியாது. ஆனால் அந்த நேரத்திலும் ஒருவர் நிலைமையை உணர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பின்னாலில் இருந்து மடக்கிப் பிடித்தார்.


அதனால், அந்த நபர் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கி கீழே விழுந்தது. அவரும் மசூதியில் இருந்து தப்பித்து ஓட வேண்டிய சூழல் ஏற்பட்டது.  அந்த நபர் மட்டும், தாக்குதல் நடத்திய நபரை பிடிக்கவில்லை என்றால், இந்த சம்பவம் இன்னும் மோசமானதாக இருந்திருக்கும். நானும் இப்படி நின்று பேசிக் கொண்டிருக்க முடியாது. அவருக்கு நான் தலை வணங்குகிறேன். அவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவரை கண்டுபிடித்து நன்றி கூறுவேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்