ஜப்பானின் கியோட்டோவிற்கு அருகில் உள்ள தீவான ஹோன்ஷுவில் ஆயிரக்கணக்கான காகங்கள் ஒரே இடத்தில் குவியும் காட்சி இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. தீவில் மர்மமான முறையில் காக்கைகள் கூடும் இந்த வீடியோவை பலர் ஷேர் செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம் கூட்டமாக குவிந்த விசித்திரமான நிகழ்வுடைய பின்னணியின் காரணம் இதுவரை என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை.
குறிப்பாக விலங்குகள் அல்லது பறவைகள் அதிக எண்ணிக்கையில் ஒரு இடத்தில் கூடுவது என்பது இயற்கை பேரழிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பரில் இதே போன்று சீன அரசு நடத்தும் 'பீப்பிள்ஸ் டெய்லி' வெளியிட்ட வைரல் வீடியோவில், சீனாவின் தொலைதூர உள் மங்கோலியா பகுதியில் உள்ள பண்ணையில் ஏராளமான செம்மறி ஆடுகள் வட்டமாக அணிவகுத்துச் செல்வது தொடர்பான காட்சிகள் வெளியாகி இருந்தது. அறிக்கைகளின்படி, செம்மறி ஆட்டு மந்தைகள் 10 நாட்கள் சாப்பிடவோ, குடிக்கவோ அல்லது தூங்கவோ கூட நிற்காமல் ஒரு வட்டத்தில் அணிவகுத்துச் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காகங்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Flocks of Crows arrive in areas of Kyoto, Honshu, Japan. (07.02.2023). 🧐 pic.twitter.com/f4VkwP8ll6
— BRAVE SPIRIT🇺🇦 (@Brave_spirit81) February 8, 2023