Skip to main content

சீன விமான நிறுவன ஊழியர்களால், இந்தியப் பயணிகள் அவமதிப்பு

Published on 15/08/2017 | Edited on 15/08/2017
சீன விமான நிறுவன ஊழியர்களால், இந்தியப் பயணிகள் அவமதிப்பு

சீனாவில் உள்ள விமான நிலையத்தில், விமான நிறுவன ஊழியர்களால், இந்தியப் பயணிகள் அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – சீனா நாடுகளிடையே, எல்லைப் பிரச்சனையால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், சீன விமான ஊழியர்களால், இந்திய பயணியர் அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து சத்னாம் சிங் சாசல் என்பவர், வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு, சீனாவின் ஷாங்கான் புடோங்க் விமான நிலையம் வழியாக பயணம் செய்ததாகவும், அங்கு இந்திய பயணிகளை இழிவுபடுத்தும் வகையில் சீன அதிகாரிகள் நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து சீன அரசிடம் விளக்கம் கேட்டு இந்திய வெளியுறவு துறை கடிதம் எழுதியுள்ளது.

சார்ந்த செய்திகள்