Skip to main content

2017ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published on 09/10/2017 | Edited on 09/10/2017
2017ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2017ஆம்  ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, அவரவர் துறைசார்ந்த நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க பொருளாதாரவியலாளரான ரிச்சர்ட் எச். தாலேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களிடையே நிலவும் பகுத்தறிவின்மை, சமூக விருப்பங்கள், சுய கட்டுப்பாட்டில் தேக்கம் உள்ளிட்ட மனிதப்பண்புகளை ஆராய்ந்து, இவை எப்படி தனிப்பட்ட முடிவுகள் மற்றும் சந்தை விளைவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்த இவரது ஆய்வு, பொருளாதாரத்தில் எதிர்கால மாறுதல்களை ஏற்படுத்த வழிவகுக்கலாம் என்ற அடிப்படையில் இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடனில் இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத்தொகையான 1.1மில்லியன் டாலரையும் ரிச்சர்ட் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்