வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த சிலம்பரசன் என்பவர் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை அழைத்துக் கொண்டு சென்று விட்ட விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரன்யம் அருகே உள்ள தேத்தாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ). அவர் வேதாரன்யத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்துவருகிறார். அதே கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார் சிலம்பரசன். இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர். அவர் ஏற்கெனவே விதவையான ஒருவரை காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்தநிலையில் வசந்தியோடு அதிக நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் விவகாரம் அரசல் புரசலாக கல்லூரியில் கசிய, இருவரும் எஸ்கேப் ஆனார்கள். இந்த செய்தி வசந்தியின் பெற்றோர்களுக்கு தெரியவந்து, கல்லூரிக்கு வந்து கல்லூரி முதல்வரிடம் முறையிட்டனர். கல்லூரி நிர்வாகமோ, இந்த விவகாரத்தால் நாங்களும் கோபத்தோடு இருக்கிறோம், உங்கள் கோபமும், ஆத்திரமும் நியாயமானது, அவர் எப்படியும் கல்லூரிக்கு வருவார். உங்களுக்கு நிச்சயம் தகவல் கொடுக்கிறோம், அதோடு எந்தக்கல்லூரியிலும் வேலையில் சேரமுடியாதபடி சான்றிதழ் கொடுக்கும் போது செய்துவிடுகிறோம் என சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டனர்.
பிறகு வேதாரன்யம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல்துறையினரோ பெண் மேஜர், அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது, அவர்களை நாங்கள் நிச்சயம் பிடித்துவிடுவோம். இரண்டொரு நாளில் உங்க பெண்ணை மீட்டுத்தருகிறோம் என கூறிவிட்டனர்.
இதற்கிடையில் ஆசிரியர் சிலம்பரசனும், மாணவி வசந்தியும் திருவிடைமருதூரில் இருப்பது தெரிந்து அங்கு வசந்தியின் பெற்றோர்கள் வந்து வீட்டிற்கு வரும்படி மன்றாடினர். நான் வரமுடியாது, எனக்கு சிலம்பு தான் முக்கியம், வாழ்ந்தால் அவர்கூடத்தான், செத்தாலும் அவர்கூடத்தான், என மூஞ்சில் அடித்தார் போல கூறிவிட்டார். அந்த நேரத்தில் முதல் மனைவியும் விவகாரம் தெரிந்து வந்துவிட்டார். முதல்மனைவி ஆசிரியர் சிலம்பரசனிடமும், வசந்தியிடமும் அவரது பெற்றோர்களும் மன்றாடி வருகிறார்கள். நாங்க இருவரும் சேர்ந்து வாழப்போறோம், வாழவிடுங்க என உடும்பு பிடியாக நிற்கிறார்கள் மாணவியும், பேராசிரியரும்.
கல்விப்பாடம் சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர் காமப்படம் சொல்லி கொடுத்து டீன் ஏஜ் பருவம் கொண்ட மாணவியை கடத்தி சென்று உள்ளார். இது போன்ற விரிவுரையாளர்களை இனி எந்த கல்லூரியிலும் பணியமர்த்த கூடாது.
பெற்றோர்கள் பேராசிரியர்களை நம்பி தான் பெண் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்கள். கல்லூரிக்கு அனுப்பும் பெண் பிள்ளைகளிடம் நல்ல அறிவுரைகளை பெற்றோர்கள் கூறி அனுப்ப வேண்டும்."என்கிறார் வழக்கறிஞர் பாரிபாலன்.