
திருச்சியில் கடந்த 7ம் தேதி தனது மனைவி உஷாவுடன் இருசக்கர வானகத்தில் சென்ற ராஜா என்பவரை, போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் விரட்டி சென்று எட்டி உதைத்ததில் ராஜாவின் மனைவி உஷா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அவர் உஷா அப்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்தார் என ராஜா கூற, இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, பின் போலீசாரால் அடித்து விரட்டப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இடை நீக்கம் செய்யப்பட்டார். சமூக வலைத்தளங்களில் காமராஜுக்கும், காவல் துறைக்கும் எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், உஷாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த சரவணன் என்கிற மருத்துவர் அதன் அறிக்கையை. அதில், உஷா கர்ப்பிணி இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என திருச்சியை மாவட்ட எஸ்.பி கல்யாணம் தெரிவித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நம் எஸ்.பியிடம் பேசின போது அவர் நம்மிடம் அரசு மருத்துவர்கள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் பண்ணியிருக்கிறார்கள். அவர் கர்ப்பம் இல்லை என்றும் வயிற்றில் சிரிய அளவு கட்டியிருக்கிறது என்றார்.
இது குறித்து நம்மிடம் உஷாவின் கணவர் ராஜாவிடம் பேசின போது போலிஸ் ஆரம்பத்திலே இருந்தே இந்த விசயத்தை தப்பான அனுகுமுறையில் தான் இருக்காங்க. இந்த போஸ்மார்டத்திலும் என்னவோ பண்ணியிருக்காங்க, என் மனைவி என்னிடம் கர்ப்பம் என்று சொன்னதை தான் சொல்லி அழுதேன். இதை போலிஸ் மாத்த முயற்சி செய்றாங்க. என்று அழுதார்.
திருச்சியில் ஏற்கனவே கடத்தி கொலை செய்யப்பட்ட இராமஜெயம் கொலை வழக்கிலும் போஸ்மார்டம் ரிப்போர்ட் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது போன்றே இப்போ உஷாவின் போஸ்மார்டம் ரிப்போர்ட் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
- ஜெ.டி.ஆர்.