Skip to main content

“எனக்கு நடந்தது யாருக்கும் நடக்கக்கூடாது தாயே” - நெஞ்சில் அடித்து அழுத குற்றவாளி

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

"What happened to me should not happen to anyone, mother" the criminal cried beating his chest

 

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான காமராஜ். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த 15 வயது சிறுமியைக் கடந்த ஆண்டில் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் தாயார் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காமராஜ் கைது செய்யப்பட்டார்.

 

வழக்கை விசாரித்த நீதிபதி வழங்கிய தீர்ப்பில், குற்றவாளியான காமராஜுக்கு ஆயுள் தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் ஒரு வருட சிறை தண்டனை என உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், கொலை மிரட்டல் விடுத்த வழக்கிலும் இரண்டு வருட சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

 

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 5 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார். தீர்ப்பினைக் கேட்டதும் குற்றவாளியான காமராஜ் கதறி அழுதார். நெஞ்சில் அடித்துக் கொண்டு எனக்கு நடந்தது யாருக்கும் நடக்கக் கூடாது தாயே என்று அழுத அவரை காவல் துறையினர் இழுத்துச் சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்