Skip to main content

மூதாட்டி பாலியல் பலாத்காரம்: 73 வயது முதியவர் சிறையில் அடைப்பு

Published on 09/11/2019 | Edited on 09/11/2019

 

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மனைவி முனியம்மாள். வயது 70. முனியம்மாள் தனது வீட்டில் தனியாக  படுத்துக்கொண்டு இருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த துரைசாமி மகன் ஜானகிராமன் (வயது 73) என்ற காமகொடுரன்  வீட்டினுள் நுழைந்து படுத்திருந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

 

arrested


 

சம்பவம் அறிந்து முனியம்மாளின் மகள் தட்டிக்கேட்டபோது இருவரையும் அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மூதாட்டி முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரியில் தீவிர சிகிச்சை பெற்றார். பாதிக்கப்பட்ட முனியம்மாள் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி காவல் ஆய்வாளர் பத்மா வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து போலீசார் ஜானகிராமனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


 

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே திருக்கோவிலூர் தாலுகா எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நான்காவது படிக்கும் 9 வயது சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த அப்துல் கபூர் மகன் அப்துல் ரசாக் (வயது 58) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மா அவர்கள் வழக்கு பதிவு செய்து காம அரக்கனை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பென்சில் வாங்க வந்த சிறுமிக்கு சேர்ந்த கொடூரம்; மளிகைக் கடை முதியவருக்கு சிறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Cruelty meted out to a girl who came to buy a pencil; Jail for grocery shop old man

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 62 வயது முதியவரை போலீசார் கைது செய்த நிலையில் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மாஸ்கோ நகரைச் சேர்ந்தவர் 62 வயதான சிவா. இவர் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமி ஒருவர் சிவாவின் கடைக்கு சென்று பென்சில் வாங்கியுள்ளார். அப்பொழுது சிறுமியை அழைத்துச் சென்ற சிவா அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இது குறித்து அச்சிறுமி அவரின் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவாவை போலீசார் கைது செய்தனர். இந்தப் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.