தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், திருமூலர், ஆண்டாள், வள்ளலார், மறைமலையடிகள், உ.வே.சாமிநாதய்யர், பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், கருணாநிதி, கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரை பற்றிய கட்டுரைகளை கவிஞர் வைரமுத்து அரங்கேற்றியுள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை வரிசையில் 16-வது கட்டுரையான தொல்காப்பியர் பற்றிய ஆய்வு கட்டுரையை அரங்கேற்றும் விழா சென்னை அடையாறு ராஜரத்தினம் கலையரங்கில் நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் தலைமை தாங்கினார். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார். முன்னதாக தொல்காப்பியர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா, மரபின் மைந்தன் முத்தையா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கணேசன், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சந்திரசேகர், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டி.ராஜா, முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவகர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ம.ராஜேந்திரன், எழுத்தாளர் சிலம்பொலி செல்லப்பன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முத்துலிங்கம், நடிகர் ராஜேஷ், மணிமேகலை கண்ணன், இளையபாரதி, வக்கீல் வி.பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
படங்கள் : குமரேஷ்