திருச்சி மாநகர காவல்துறையில் நுண்ணறிவு உதவி ஆணையராக கடந்த 3 ஆண்டுகளாக இருப்பவர் கபிலன். இதற்கு முன்பு இந்த பதவியில் இருந்தவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு சிக்கலில் சிக்கி அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
திருச்சி மாநகர ஆணையராக அருண் ஐபிஎஸ் இருந்த போது லாட்டரி பிரச்சனையில் நுண்ணறிவு பிரிவு பகிரங்க குற்றச்சாட்டு எழுந்த போது அதிரடியாக அருண் ஐபிஎஸ். மாற்றப்பட்டார்.
உதவி ஆணையர் கபிலன் மாத இறுதியில் பணி ஓய்வு பெறுவதால் அந்த இடத்தை பிடிப்பதற்கு திருச்சி காவல்துறை அதிகாரிகளிடையே பலர் அதிகாரம் மற்றும் அரசியல் பலத்தோடு மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
திருச்சி மாநகரில் மாநகர காவல்துறை ஆணையருக்கு அடுத்து அதிகாரம் உள்ள பதவி என்பதால் அநத இடத்தை பிடிப்பதற்கு பலமுனை போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
தற்போது பதவியில் இருக்கும் உதவி ஆணையர் கபிலன் தன் உறவுக்காரான தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் டி.எஸ்.பி. சீத்தாராமனை இந்த இடத்திற்கு கொண்டுவருவதற்கு தலைமைச்செயலகத்தில் உள்ள தனக்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் மூலம் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
இதை அறிந்த மாநகர போலிசார்கள் ஏற்கனவே கபிலன் திருச்சியை கட்டிக்காத்தார். இப்போ மாமா தன்னுடைய மச்சானுக்கு சிபாரிசு செய்து ஒய்வு பெற்ற பிறகும் திருச்சியில் தன்னுடைய அதிகாரத்தில் வைத்து கொள்ள முயற்சி செய்கிறார் என்கிற குரலும் ஓங்கி ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
அதே நேரத்தில் திருச்சி மாநகர ஆணையராக அமல்ராஜ் ( தற்போது மத்திய மண்டல ஐஜியாக உள்ளார் ) இருந்த போது கபிலன் இடத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்த ஏசி இராமசந்திரன் என்பதை சிபாரிசு செய்து அனுப்பி இருந்தார். ஆனால் அப்போது ஏசி கபிலன் தனக்கு உள்ள தலைமை செயலக அதிகாரிகள் உதவியுடன் தன் இடத்தை தக்க வைத்து வைத்துக்கொண்டார்.
தற்போது கபிலன் இடத்திற்கு மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ், மற்றும் தற்போது மாநகர ஆணையர் வரதராஜீலு ஆகியோர் இருவரும் இணைந்து ஸ்ரீரங்கத்தில் ஏசியாக இருக்கும் ராமசந்திரனை நுண்ணிறிவு பிரிவு ஏசி பொறுப்புக்கு சிபாரிசு செய்து இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் திருச்சி மாவட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜனோ கீரனூரில் டி.எஸ்.பி.யாக இருக்கு பிரன்சிஸ் சேவியருக்கு சிபாரிசு செய்திருக்கிறார்.
இதே நேரத்தில் திருச்சியை பூர்வீகமாக கொண்டு நுண்ணறிவு பிரிவில் இருந்த சுகுமார் தற்போது கரூரில் டி.எஸ்.பியாக இருக்கிறார். அவர் மீண்டும் திருச்சி வருவதற்கும் முயற்சி செய்கிறார் என்கிறார்.
இந்த போட்டியில் பொன்மலை ஏசி பாலமுருகனும் தனக்கு உள்ள மேலிட செல்வாக்கு மூலம் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.