இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும். ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும். 30வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அந்த முப்பது நாட்கள் முடிவடைந்து இன்று ரமலான் பண்டிகையானது நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி தங்களுடைய ரமலான் பண்டிகை தொழுகையை செய்தனர்.
அதில் தவ்ஹீத் ஜமாத்தின் திருச்சி மாவட்டம் சார்பாக பெருநாள் தொழுகை திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பி ஒத்தக்கடை ஈத்கா மைதானம், எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள எல்.கே.எஸ் மஹால் என பல்வேறு இடங்களில் இன்று ரமலான் தொழுகை நடைபெற்றது.