Skip to main content

வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம்! 

Published on 23/02/2022 | Edited on 23/02/2022

 

Trichy Commissioner order to impose Goondas on theft case

 

சாலையில் நடத்து சென்றவரிடம் வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வா.உ.சி. சிலை அருகில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர், தன் பாக்கெட்டில் இருந்து ரூ.500 பறித்து சென்றதாக திருச்சி காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் கொழுப்பு பாரதி (எ) பாரதிதாசன் (23) என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

 

விசாரணையில் குற்றவாளியான பாரதிதாசன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்ததால், தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், திருச்சி மாநகர் ஆணையர் கார்த்திகேயனுக்கு அறிக்கை கொடுத்தார். அந்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், பாரதிதாசனை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ளவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்