நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வசித்து வந்தவர் பார்வதி. நேற்று 19 ந் தேதி மாலை குமாரபாளையம் காவல் நிலையம் சென்ற பார்வதி திடிரென உடலில் மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்துக் கொன்டார். போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடலில் பற்றிய தீயை அணைத்து ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
கோவை பீளமேட்டை சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி பார்வதி. இவர்களிடம் கார் ஒட்டுனராக வேலை செய்தவர் குமாரபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன். சில நாட்களில் பார்வதி- ஈஸ்வரன் கள்ள தொடர்பு ஏற்பட்டு பிறகு பார்வதி கணவனை விட்டு பிரிந்து ஈஸ்வரனோடு குமாரபாளையம் வந்து இருவரும் குடும்பம் நடத்தினார்கள். ஈஸ்வரனுக்கு ஏற்கனவே திருமனமாகி மல்லிகா என்ற மனைவி உண்டு.
இந்நிலையில் பார்வதி கோவையில் இருந்த சொத்துக்களை விற்று சுமார் 1.50 கோடி வரை ஈஸ்வரனுக்கு அவ்வப்போது கொடுத்து வந்துள்ளார். பார்வதி மீதான ஈஸ்வரனின் மோகம் நாளுக்கு நாள் குறைய தொடங்கியது. பார்வதி வீட்டுக்குச் செல்வதை ஈஸ்வரன் தவிர்த்து வர இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதனால் தான் கொடுத்த பணத்தை திருப்பி தர வேன்டும் என குமாரபாளையம் காவல் நிலையத்தில் பார்வதி புகார் கொடுத்துள்ளார். இதன் பிறகு ஈஸ்வரன் மற்றும் அவரது மனைவி மல்லிகா, சகோதர் ஜம்பு என்பவர் பார்வதியை கடுமையாக மிரட்டியுள்ளனர். இதையும் காவல் நிலையத்தில் பார்வதி புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்து காவல் நிலையத்திற்கு முன்பே போய் உடலில் மண்ணென்னை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
பார்வதியின் மகளுக்கு திருமணமாகி கோவையில் ஒரு மகன் உள்ளான். குமாரபாளையத்தில் படித்து வருகிறான்.
அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக தாலி கட்டிய கணவனை விட்டு விட்டு கள்ளக்காதலுடன் ஊர் விட்டு ஊர் வந்து இப்போது உயிரையே விட்டு விட்டாள் இந்த பார்வதி.