தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. வேட்பு மனு மீதான பரிசீலனையும் முடிந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் எத்தனை பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 சட்டமன்றத் தொகுதிகளில் 3,997 பேர் போட்டியிடுகின்றனர். இதில், ஆண் வேட்பாளர்கள் 3,585, பெண் வேட்பாளர்கள் 411, மூன்றாம் பாலினம்- 2 பேர் களத்தில் உள்ளனர். 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் 4,442 மனுக்கள் ஏற்கப்பட்டன; 2,807 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது 234 சட்டமன்றத் தொகுதிகளில் 3,728 பேர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.