Skip to main content

திருவண்ணாமலை - திமுக வழக்கறிஞர் அணி மீது வழக்கு!

Published on 10/08/2020 | Edited on 10/08/2020
t.malai

 

 

ஆகஸ்ட் 7ந் தேதி கலைஞரின் 2 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் போன்றவை வழங்கப்பட்டன. அதன்படி திருவண்ணாமலை நகரத்தின் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

 

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தின் முன்பு திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் அன்னதானமும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. அப்படி வழங்கப்பட்ட உதவிகளின் போது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை, முறையான அனுமதி பெறவில்லையென திருவண்ணாமலை நகர கிழக்கு காவல்நிலையத்தில் திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கே.வி.மனோகரன் உட்பட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.

 

இதுபற்றி நமக்கு தெரிந்த காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, மாவட்ட திமுக தொடர்ச்சியாக அரசின் தடை உத்தரவை மீறி வருகிறது. அவர்களுக்கு அதுபற்றி உணர்த்தவே வழக்கு பதிவு செய்ய முடிவு செய்தோம். அதன்படி மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதை விட திமுக வழக்கறிஞர் அணி மீதே வழக்கு பதிவு செய்தால் அந்த கட்சியில் உள்ள மற்றவர்களுக்கு ஒரு பயம் இருக்கும் என்பதாலே வழக்கறிஞர் அணி மீது வழக்கு பதிவு செய்துள்ளோம் என்றார்.

 

ஆளும்கட்சியான அதிமுக, பலமடங்கு விதிகளை மீறுகிறது, அவர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்புகிறார்கள் திமுகவினர். 

 

 

சார்ந்த செய்திகள்