முனைவர் நா. நளினிதேவி அவர்களின் ''புறநானூறு தமிழரின் பேரிலக்கியம்'', ''காதல் வள்ளுவன்'', ''என் விளக்கில் உன் இருள்'', ஆகிய மூன்று நூல்கள் இதழியல் போராளி நக்கீரன் ஆசிரியர் தலைமையில் சென்னையில் வெளியிடப்பட்டது.
சென்னை வேளச்சேரியில் உள்ள ஸீஷெல் ஹோட்டல் அரங்கத்தில் ஞாயிறு மாலை நடந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வளர்களை நக்கீரன் முதன்மை துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் வரவேற்றார்.
புறநானூறு தமிழரின் பேரிலக்கியம் எனும் நூலை, பிலிப் சுதாகர் வெளியிட்டார். அதனை கவிதாயினி பாரதிபத்மா பெற்றுக்கொண்டார். அதேபோல் காதல் வள்ளுவன் என்னும் நூலை முனைவர் ய. மணிகண்டன் வெளியிட கவிதாயினி மனோகரி மதன் பெற்றுக்கொண்டார். என்விளக்கில் உன் இருள், எனு நூலை கவிஞர் ஜெயபாஸ்கரன் வெளியிட கவிதாயினி நர்மதா பெற்றுக் கொண்டார்.
நக்கீரன் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடந்த இந்த இலக்கிய வட்ட நிகழச்சியை இலக்கிய முற்றமும், நிலாவட்டத்தினரும் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் முனைவர் ரா.மணிவண்ணன் வாழ்த்துறை வழங்கினார். ஈரோடு தமிழன்பன் சிறப்புறையாற்றினார். இறுதியில் முனைவர் நா.நளினிதேவி ஏற்புரை ஆற்றினார்.
நீண்ட காலத்திற்கு பிறகு இலக்கிய வட்டங்கள் ஒன்று கூடிய நிகழச்சி என்பதால் இலக்கிய ஆர்வளர்கள் அதிகமாகவே ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.