தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பொதுக்குழு ஆலோசனை கூட்டம் கும்பகோணம் ரோட்டரி சங்கம் கட்டிடத்தில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் இயற்கை வேளாண்மையின் அவசியத்தை உலக நாடுகள் முழுவதும் உணரவைத்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு கல்லணையில் நினைவு மணிமண்டபம் தமிழகஅரசு கட்ட வேண்டும் . மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தொடர்ந்து கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் விழிப்புணர்வு பெற பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாகண்ணுவை தாக்கிய சமூக விரோதியை கண்டித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து விவசாயிகளை ஒன்று திரட்டி தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மறைந்த முன்னாள் முதல்வர் 2016 தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி திருவைகாவூர் முத்துவாஞ்சேரி இடையே கொள்ளிடத்தில் கதவணை மற்றும் ஆறுகளின் படுக்கை தடுப்பணைகள் அமைத்திட தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிட வேண்டும்.
நான்கு ஆண்டுகளாக மின்மிகை மாநிலம் என்ற கூறும் தமிழக அரசு 15 ஆண்டுகளாக புதிய மின் இணைப்பிற்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை உடனே வழங்க வேண்டும் கரும்பு விவசாயிக்கு சுமார் 1400 கோடிக்கு மேல் பணம் மற்றும் கரும்புக்கான கூடுதல் விலை வழங்க படமால் விவசாயிகள் அலைகழிக்கப்பட்டு ஏமாற்றப்படுவதால் ஆலைகள் மீதம் அரசின் மீதும் மத்திய அரசின் மீதும் வழக்குகள் தொடர்வது, குடி மரத்துப் பணிகள் தூர்வாரும் பணிகள் குருவை சம்பா சிறப்பு தொகுப்பு திட்டங்கள் வறட்சி நிவாரணம் வழங்கல் மற்றும் நெல் கொள்முதல் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை அறவே இல்லை இவைகளில் லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது வறட்சி நிவாரணம் குருவை சம்பா சிறப்புத் தொகுப்பு திட்ட பயனாளிகள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடவேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்களை முன்வைத்தனர்.