குறைப்பிரசவத்தில் 580 கிராம் எடையில் பிறந்து உயிருக்கு போராடிய குழந்தையை 5 மாதங்கள் இங்க் பேட்டரில் வைத்து, 2 கிலோ 20 கிராமுக்கு எடை உயர்த்தி பிழைக்க செய்த நாகை அரசு மருத்துவமனைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் நாகை அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்ற அந்த தொகுதியின் எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி, தலைமை மருத்துவர் டாக்டர் காதர், நிலைய மருத்துவ அதிகாரி முருகப்பன், குழந்தை மருத்துவர்கள் ஜெயக்குமார், சித்தார்த்தன், முகம்மது ஷேக், டாக்டர் கலா (JD), நர்ஸ் சத்யா, மருவரசி, ஜெஸீனா, ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
அப்போது, இதுபோன்ற அர்ப்பணிப்பான சேவைகள், அரசு மருத்துவமனைகளின் மீதான நன்மதிப்பை கூட்டுகின்றன என்றார். சுகாதரம் மற்றும் சேவையில் இம்மருத்துவமனை நிர்வாகம் பல அரசு விருதுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
.
இது போன்ற அர்ப்பணிப்பான சேவைகள், அரசு மருத்துவமனைகளின் மீதான நன்மதிப்பை கூட்டுகின்றன என்றும் கூறினார். சுகாதரம் மற்றும் சேவையில் இம்மருத்துவமனை நிர்வாகம் பல அரசு விருதுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.