Skip to main content

ஒரிரு நாட்களில் பணி நியமனம்! - ஆசிரியர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

Teacher appointment in one or two days ...- Minister Senkottayan confirmed!

 

2018-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாட்களில் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

 

கடந்த 2018-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வெழுதியவர்களில் 857 பேர் தேர்ச்சிப் பெற்றனர். அதில் மூன்று இடங்களில் 41 பேர் கணிணி பழுது ஏற்பட்டதின் காரணமாக செல்ஃபோன் மூலமாக தேர்வு எழுதியதாகக் கூறப்படுகிறது. இதனால் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்கள் இதுகுறித்து வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கு காரணமாக தேர்ச்சிப் பெற்றவர்களுக்குப் பணி நியமனம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் குறிப்பிட்ட தேர்வு அறையில் இருந்தவர்களுக்கு மறு தேர்வு வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மற்றவர்களுக்குப் பணி நியமனம் வழங்குவதில் தடையில்லை என்று கூறியது. 

 

அதைத் தொடர்ந்து தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கடந்த வாரம் கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்து மனு அளித்தனர். அப்போது முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். இன்று (19.12.2020) 50-க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோபிசெட்டிபாளையத்தில் இருந்த அமைச்சரை நேரில் வந்து சந்தித்தனர். அப்போது, ஓரிரு நாட்களில் முதலமைச்சரிடம் கலந்து பணி நியமன ஆணையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் அமைச்சர் கூறியதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் கலைந்துசென்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்