தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு ஒருபுறம் வாசிக்கப்பட்டாலும், மது விற்பனையோ அதன் எல்லை கடந்து சென்று சென்று கொண்டிருக்கிறது. பண்டிகை தினம் என்றாலே முதலில் கொண்டாட்டம் மதுப் பிரியர்களுக்குத் தான். அந்த வகையில் அரசு டாஸ்மாக்கில் மட்டுமல்லாமல் ஹோட்டல் பார்களிலும் அவைகள், கொண்டாட்டமான விற்பனையைத் தாண்டியிருக்கிறது.
இந்த வருட தீபாவளி ஞாயிறு விடுமுறை தினத்தில், மறு நாள் விடுமுறை. தீபாவளியின் போது மது மட்டுமல்லாமல் பல வகையான இறைச்சிகளின் விற்பனையும் எகிறியுள்ளன.
நெல்லை மாவட்டத்தின் 154 டாஸ்மாக் கடைகளின் தினசரி விற்பனை சராசரி 3.50 கோடி. ஞாயிற்றுக்கிழமை என்றால் மது பானங்களின் விற்பனை 4 கோடியைத் தாண்டும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, அடுத்த நாள் என்று மொத்த விற்பனை 6.20 கோடிக்கு போயிருக்கின்றது என்கின்றது சம்பந்தப்பட்ட துறையின் புள்ளி விபரங்கள். அதே சமயம் நாங்குநேரியில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட நாட்களின் விடுப்பிருந்த போதும் விற்பனை அமர்க்களப்பட்டிருக்கிறது.
138 டாஸ்மாக் கடைகளைக் கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தின் மது பானங்களின் விற்பனை தீபாவளி பாண்டிகையையொட்டி 55 சதவிகிதம் கூடுதல் என்கிறது புள்ளி விவரப்பட்டியல். குறிப்பாக தீபாவளிப் பண்டிகை, அதற்கு மறு நாள் என இரண்டு நாட்களில் மட்டும் 7 கோடி 64 லட்சம் ரூபாய்க்கு சேல்ஸ் என்கிறார்கள் டாஸ்மாக் அதிகாரிகள்.
மொத்தத்தில் தீபாவளியில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 13.84 கோடி அளவில் மது விற்பனை சாதனை நிகழ்ந்துள்ளது தமிழககத்தில்.
இந்த மொத்த விற்பனை வேதனை அளிப்பதாக உள்ளது. என்கிறார்கள் பொது மக்களும் சமூக நல ஆர்வலர்களும்.