Published on 26/08/2020 | Edited on 26/08/2020

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை நகர், புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.