![tamilnadu chief minister wrote a letter for karnataka chief minister](http://image.nakkheeran.in/cdn/farfuture/j5ZmgqGEBzux_Vztioixt9n7PgTeI9nop9ZbKXV-4DI/1625400487/sites/default/files/inline-images/MKS4333%20%281%29_45.jpg)
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு இன்று (04/07/2021) கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும். பெங்களூரு குடிநீர் தேவைக்காக அணை கட்டுவதாகக் கூறும் கருத்தை ஏற்க முடியாது. பெங்களூரு குடிநீர் தேவைக்காக என கூறப்படும் நிலையில் வெகுதொலைவில் அணை கட்டப்பட உள்ளது. குடிநீருக்காக ஏற்கனவே போதிய கட்டமைப்புகள் உள்ள நிலையில் இத்திட்டத்தை ஏற்க இயலாது. மேகதாது திட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழகத்திற்கு அங்கீகரித்த நதிநீர் பங்கீட்டு அளவை குறைத்துவிடும். தமிழகம்- கர்நாடகா இடையே நல்லுறவு தழைக்க ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேகதாது திட்டத்திற்கு ஒத்துழைப்பு கேட்டு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, நேற்று (03/07/2021) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.