கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக முன்பு நடந்ததை போல் சென்னை கலைவாணர் அரங்கில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் வரும் 7 ஆம் தேதி வரை நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்யப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவையின் கேள்வி நேரம் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
அண்மையில் சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே நீர் தேங்கி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். அந்த நேரத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 'கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணம் என்ன செய்யப்பட்டது. முறைகேடுகள் நடந்திருப்பதே இப்படி மழைநீர் தேங்க காரணம்' என்றார். மேலும் இது குறித்து விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற பேரவை விவாதத்தில், ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்கக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.