Skip to main content

பிரசவம் முடிந்து கருப்பையுடன் குடலையும் சேர்த்து தையல் போட்ட அவலம்

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

Suturing the uterus and intestines together is painful

 

கடந்த மாதம் கடலூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் பகுதியைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பத்மாவதி வயிற்றில் இருந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுத்துள்ளனர். 

 

அறுவை சிகிச்சை முடிந்து சிகிச்சைகளும் முடிந்த பின் பத்மாவதியின் வயிறு தொடர்ந்து உப்பி வந்துள்ளது. இது குறித்து மருத்துவ நிர்வாகம் சரியாக பதில் அளிக்காததால் உறவினர்கள் பத்மாவதியை புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  

 

ஜிப்மர் மருத்துவர்கள் பரிசோதித்ததில் அறுவை சிகிச்சை முடிந்து தையல் போடும் பொழுது மருத்துவர்கள் கருப்பையும் குடலும் ஒன்றாக தைத்திருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

சிகிச்சை முடியும் முன்பே இது குறித்து கேட்ட பொழுது அங்கிருந்தவர்கள் சரியாகப் பதில் அளிக்காததால் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இது போல் வேறு யாருக்கும் நடந்து விடக் கூடாது என்றும் உடனடியாக மருத்துவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்