Skip to main content

'இந்தாண்டு அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கிடையாது' -உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Published on 27/11/2020 | Edited on 27/11/2020
SUPREME COURT TAMILNADU GOVERNMENT ORDER QUOTA

 

 

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசின் உத்தரவை உறுதி செய்தனர். 

 

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தனியார் மருத்துவர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர். அதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி உள்பட மருத்துவ மேற்படிப்புகளில் இந்தாண்டு அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கிடையாது' என தீர்ப்பளித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்