நிறுவனங்கள், தொழிற்சாலைகள் எனப் பல இடங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் கட்டாயம் விடுப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த மனு உச்சநீதிமன்ற தலைமையில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கினால், அது அவர்களை நிறுவனங்களில் இருந்து ஒதுக்கி வைக்க வழி வகுக்கும். தனியார் நிறுவனங்கள் இதனைக் காரணம் காட்டி பெண்களை வேலைக்கு எடுப்பதில் தயக்கம் காட்டலாம். பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக கூட அமைய வாய்ப்பிருக்கிறது” என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இது அரசின் கொள்கை சார்ந்த விஷயம்; இதில் நீதிமன்றம் கவனம் செலுத்த விரும்பவில்லை என்றனர்.
மேலும், “மனுதாரர், அரசை அனுகலாம். அதேசமயம் மத்திய அரசு இது தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் நிறுவனக்களுடன் கலந்து ஆலோசித்து வழிக்காட்டு நெறிமுறைகளை கொண்டுவரலாம். மாநில அரசுக்கு இந்த விஷயத்தில் முடிவு எடுக்க உரிமை உண்டு” என்றும் தெரிவித்தனர்.