Skip to main content

ஆபாச நடனத்தை தடுத்து நிறுத்துங்கள்: மேடை நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் புகார்

Published on 22/08/2017 | Edited on 22/08/2017
ஆபாச நடனத்தை தடுத்து நிறுத்துங்கள்: 
மேடை நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் புகார்



புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் பிரதிநிதிகள் மனு நீதி நாளான நேற்று ஆபாச நடனத்திற்கு நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுக்க வந்தனர். 

அந்த மனுவில்.. நாங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக மேடைகளில் நடன நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். எங்களால் எந்த மேடையிலும் ஆபாசம் இல்லை. ஆனால் சிவகங்கை மாவட்டம் துவார் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் நடத்தும் கல்லூரி பாய்ஸ் என்ற நடன குழுவினர் தொடர்ந்து ஆபாச நடனங்களை திருவிழா மேடைகளில் அரங்கேற்றுவதாக பல புகார்கள் உள்ளது. ஆனால் வழக்கு பதிவு செய்த காவல் நிலையங்கள் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்காததால் 20 ந் தேதி அன்னவாசல் ஒன்றியம் மாங்குடி கிராமத்தில் வெளி மாநில பெண்களை வைத்து மிகவும் ஆபாசமான நடன நிகழ்ச்சியை அரங்கேற்றி உள்ளார். இதனால் பொதுமக்கள் பெண்கள், மேடை நடன நிகழ்ச்சிகளை வெறுக்கும் நிலையில் உள்ளனர். ஆகவே தொடர்ந்து ஆபாச நடனங்களை அரங்கேற்றும் நபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும்.

ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடந்த ஊர்கள்.. சித்தன்னவாசல், ஆரியூர், சீமானூர், கத்திரிக்காடு, திருவப்பாடி, அம்மன் குறிச்சி, திருமயம் ஆகிய ஊர்களில் நடந்த திருவிழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடந்துள்ளது என்றும் அந்த புகார் மனுவில் கூறியிருந்தனர். மேலும் பல புகைப்பட ஆதாரங்களையும் இணைத்து புகார் கொடுத்தனர்.

-இரா.பகத்சிங்  

சார்ந்த செய்திகள்