இம்மாத இறுதிக்குள் நீட் பயிற்சி மையங்கள் –செங்கோட்டையன் அறிவிப்பு!
நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க இம்மாதம் இறுதிக்குள் 412 பயிற்சி மையங்கள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முதுநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற முடிவில் மாற்றமில்லை. அதேசமயம், போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவது அவசியம். அனைத்து இடங்களிலும் அரசின் சார்பில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். நடப்பாண்டு இறுதிக்குள் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். அதுவரை தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். நவோதயா பள்ளிகள் அரசின் கொள்கை முடிவு என்பதோடு அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் கருத்து எதையும் தற்போது கூற முடியாது என்றும் அவர் கூறினார்.