Skip to main content

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு;மாணவர் சங்கம் வலியுறுத்தல்

Published on 06/08/2017 | Edited on 06/08/2017
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு;
மாணவர் சங்கம் வலியுறத்தல்

மத்திய அரசு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்திய மாணவர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டப் பேரவை எஸ்.விக்கி தலைமையில் ஞாயிற்றுக்கிழமையன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநாட்டை தொடங்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.பிரகாஷ் பேசினர். வுசந்தி வரவேற்றர். தீர்மானங்களை சங்கர் வாசித்தார். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாநிலத் தலைவர் வி.மாரியப்பன் சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவராக குமாரவேல், செயலாளராக எஸ்.விக்கி, துணைத் தலைவர்களாக மணோகரன், அர்ச்சனா, துணைச் செயலாளர்களாக சங்கர், ரூபினி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு  மத்திய அரசு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நீக்கப்பட்ட பாடப்பிரிவுகளை மீண்டும் சேர்க்க வேண்டும்.  ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும்   மாணவர்களை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும். போதிய வசதியின்றி செயல்படும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அன்று மாலை புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் மத்திய அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் குமாரவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் வி.மாரியப்பன், செயற்குழு உறுப்பினர்  மாவட்டச் செயலாளர் எஸ்.விக்கி உள்ளிட்டோர் பேசினர்.

- பகத்சிங்

சார்ந்த செய்திகள்