Published on 21/05/2020 | Edited on 21/05/2020
கரோனா தொற்று பரவலை தடுக்க மருந்து கண்டுபிடித்தது, முதல்வர் பழனிசாமி அனுப்பிய நோயாளிகளை குணப்படுத்தியது, சுகாதார நிறுவனம் பற்றிய அவதூறு என பல புகார்கள் குறித்து சென்னை கோயம்பேட்டில் ரத்னா சித்த மருத்துவமனை நடத்தி வந்த சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்திற்கு எதிராக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநர் புகார் அளித்தார்.
இதையடுத்து அவர் மே 6 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது. இந்நிலையில் தற்போது அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புகார்கள் வந்தததால் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.