Skip to main content

சாரண - சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்!

Published on 16/09/2017 | Edited on 16/09/2017
சாரண - சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்!

தமிகழத்தில் சாரண - சாரணியர் இயக்கத்தின் பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் இன்று காலை, 10:30க்கு, சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் சிஇஓ, டிஇஓ உள்ளிட்ட முக்கிய பொறுப்பில் உள்ள 500க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கக உள்ளனர்.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பா.ஜ.கவின் தேசிய செயலாளரான எச்.ராஜாவும் அவரை எதிர்த்து பள்ளி கல்வியின் முன்னாள் இயக்குநர் மணி என்பவரும்  போட்டியிடுகின்றனர். மேலும் துணைத்தலைவர், ஆணையர் போன்ற 20க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

தொடர்ந்து கல்வித்துறையில் பணியாற்றி வரும் நபர்களே இந்த தேர்தலில் போட்டியிடுவார்கள் அந்த வகையில் சாரணர் இயக்கத் தலைவர் பதவிக்கு அரசியல் தலைவர் ஒருவர் போட்டியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஆசிரியர்கள், அதிகாரிகள் அனைவரும் முன்னாள் பள்ளி கல்வி இயக்குநருக்கு தங்கள் வாக்குகளை செலுத்துகின்றனரா? இல்லை பா.ஜ.க அரசியல் தலைவர் எச்.ராஜாவுக்கு வாக்குகளை செலுத்துகின்றனரா? என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. எனவே இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள் இன்று மதியம் 2மணி அளவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

- ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்