பிரபல நாட்டுப்புற இசைக்கலைஞர்களான செந்தில்கணேஷ் ராஜலட்சுமி ஆகியோர் அரிதாரம் என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் நடந்த பாட்டுப் போட்டியில் முதல் பரிசான 50இலட்சத்தை செந்தில்கணேஷ் தட்டி சென்றார். அதுபோல் அவருடைய மனைவி ராஜலட்சுமிக்கு ஆறுதல் பரிசாக 5லட்சத்தை விஜய் டிவி வழங்கியது. இப்படி ராஜலட்சுமி பெற்ற பரிசு ஐந்து இலட்சத்தை நலிவடைந்த நெசவு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவிததொகை வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் மதுரையைச் சேர்ந்த கலைப்பிரிவினர் சார்பாக மாடு ஆட்டம், மயிலாட்டம், குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. அதன்பின் இந்த விழாவில் கலந்து கொண்ட தொழிலதிபர் ரத்தினம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, மெர்சி பவுண்டேசன் நிறுவனர் மெர்சி செந்தில்குமார் அங்கிங்கு இசைக்குழுவின் நிறுவனர் அங்கிங்கு செல்லமுத்தையா,பட்டிமன்ற பேச்சாளர் ஜெயசித்ரா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு நெசவாளர் குழந்தைகள் 120 பேருக்கு தலா 2ஆயிரத்து 500 ரூபாய் வழங்கினார்கள்.
இதுபற்றி செந்தில்கணேஷ் ராஜலட்சுமி தம்பதிகள் கூறும்போது... இந்த அரிதாரம் அறக்கட்டளை மூலம் எதிர்காலத்தில் நலிவடைந்து வரும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவி செய்ய உள்ளோம் என்றனர். நிகழ்ச்சியில் நெசவு தொழிலாளர்களின் வாழ்க்கை குறித்த நாடகம் நடைபெற்றது!