திருச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி உணவு பாதுகாப்பு அலுவலர்கள், காவல்துறையினர், வணிக வரித்துறை அலுவலர்கள் சேர்ந்து இன்று (29.08.2021) அரிசி மொத்த விற்பனையாளர்களுக்கு சொந்தமான 8 அரிசி பாதுகாப்பு கிடங்குகளில் சோதனை மேற்கொண்டனர்.
அதில், கர்நாடக நிறுவனத்தின் பெயரில் போலியாக அச்சடித்து அரிசி விற்பனை செய்யப்பட்டது தெரியவந்ததை அடுத்து, சுமார் 50 ஆயிரம் கிலோ போலி அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அனைத்து மூட்டைகளிலிருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மூட்டைகளும் உரிமையாளர்கள் கைவசம் ஒப்படைத்து, அதற்கான இணைய பத்திரத்தையும் எழுதி அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதுகுறித்த அனைத்து தகவல்களையும் தற்போது மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை செய்யவுள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.