Skip to main content

நால்வர் தற்கொலைக்கு காரணமானவர் கைது

Published on 11/08/2017 | Edited on 11/08/2017
நால்வர் தற்கொலைக்கு காரணமானவர் கைது

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தாண்டனூர் பகுதியை சேர்ந்தவர் இராஜேந்திரன் (வயது-50). இவருடைய மனைவி இராணி (வயது-40). இவர்களுக்கு மோனிகா (வயது-21), ஆர்த்தி (வயது-19) என்ற மகள்களும், நவீன்குமார் (வயது-17) என்ற மகனும் இருந்தனர்.

இந்த நிலையில் இராஜேந்திரனின் மூத்த மகள் மோனிகா வாழப்பாடி அருகிலுள்ள பெரிய கவுண்டாபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது-23) என்ற ஆட்டோ டிரைவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து மோனிகாவை தங்களுடன் வந்து விடுமாறு இராஜேந்திரன் அழைத்துள்ளார். ஆனால், அவர் வர மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த இராஜேந்திரன் கடந்த 6-ந் தேதி தனது மனைவி இராணி, இளைய மகள் ஆர்த்தி, மகள் நவீன்குமார் ஆகியோருடன் பருத்தி செடிகளுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் வாழப்பாடி அருகே உள்ள சிங்கிபுரம் பகுதியை சேர்ந்த இவர்களது இராணியின் அக்கா ஒருவரின் மகனான ஜெகன் (வயது-29) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இராஜேந்திரனின் மகள் மோனிகாவின் காதலுக்கு உதவி செய்ததுடன், அப்பெண்ணுக்கு திருமணம் செய்யவும் உதவி செய்த ஜெகன், இராஜேந்திரனையும் அவருடைய குடும்பத்தாரையும் இழிவாகப் பேசி அவர்களை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து கொண்டுவந்து ஆத்தூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர்.

இதற்கு போதிய முகாந்திரம் எல்லை எனக்கூறிய நடுவர் சிவக்குமார், ஜெகனை நீதிமன்ற காவல் வைக்க மறுத்தவர், அவர் மீதான குற்றச் சாட்டு பதிவு செய்யபட்டால், விசாரணைக்கு பிறகு அவருக்குத் தண்டனை வழங்கலாம், அதுவரை ஜெகனை நீதிமன்ற காவலில் வைக்கமுடியாது என்று கூறி அவரை சொந்த பிணையில் விடுவித்துள்ளார்.

சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்