Skip to main content

ஏடிஜிபி ஜாங்கிட் பதவி உயர்வு தடை உத்தரவு நீக்கம்..!

Published on 02/08/2017 | Edited on 02/08/2017
ஏடிஜிபி ஜாங்கிட் பதவி உயர்வு தடை உத்தரவு நீக்கம்..!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கூடுதல் ஏடிஜிபி ஜாங்கிட்டுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்க தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நாகர்கோவிலில் கூடுதல் ஏடிஜிபியாக பணிபுரிந்து வந்த ஜாங்கிட்டுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு கடந்த 20ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்ககோரியும் தி.நகரை சேர்ந்த வித்யா என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வழக்கு தொடுத்தார்.

அந்த மனுவில் ‘‘ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கு ஆதரவாக ஜாங்கிட் செயல்பட்டு தனக்கு எதிராக 6 பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளார்.  அவர் இந்த பதவி உயர்வை பெற தகுதியற்றவர்’’ என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த  நீதிபதி  எஸ்.எம்.சுப்ரமணியம் ஜாங்கிட் பதவி உயர்வு தொடர்பாக தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

இதை எதிர்த்து ஜாங்கிட் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எச்.ஜி. ரமேஷ், ஜெ.ஜெயசந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தடை உத்தரவை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

-சி.ஜீவா பாரதி 

சார்ந்த செய்திகள்