புதுக்கோட்டையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார்..
மத்திய அமைச்சரின் ஆலோசனைப்படி, நான் தலைவராக சென்ற குழு மூலம் கடந்த வாரம்.. மேற்குவங்க மாநிலம் ஆரார்யா பகுதியில் காய்கறி மூட்டைகளை போல கட்டி கடத்தப்பட்ட 5 குழந்தைகளை மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் பற்றிய மருத்துவ குறிப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாங்கள் செய்த விசாரனையில் ஸ்பெயின் நாட்டிற்கு ராஜ்குமார் என்ற குழந்தை ரூ 4 லட்சத்திற்கு விற்க்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்து அந்த குழந்தையை மீட்கும் முயற்சியாக ஸ்பெயின் தூதரகத்தில் ஆவணங்களுடன் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தை கடத்தலில் ஈடுபடுவோர்கள் குறித்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது. அதாவது சுமார் 2500 அனுமதி பெறாத குழந்தை பாதுகாப்பு செயல்படுவதாக அறியப்பட்டுள்ளது. குழந்தை கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் மாவட்ட வாரியாக குழு அமைக்கப்படும். இனிமேல் குழந்தை கடத்தலி்ல் ஈடுபடுவோருக்கு மரணதண்டனையை விட கொடிய தண்டனை வழங்கபடும். பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதியோடு மனநல கலந்தாய்வு நடத்தப்படும். இதற்காக குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க ஆலோசகர்கள் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு விரைவில் சிக்கிம் அல்லது மணிப்பூரில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
குழந்தைகள் தெய்வத்திற்கு சமமானவர்கள் அவர்களை தொழில் ரீதியாகவோ, படிப்பிலோ கொடுமைப்படுத்த நினைக்கும் பெற்றோர்கள் கூட அஞ்சும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளை நேரடியாகவோ அல்லது உறுப்புகளுக்காகவோ, அயல்நாடகளுக்கு கடத்தவோ, விற்பனை செய்யவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவேருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கபப்டும்.
எங்கள் ஆணையத்தின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் பார்த்த லதா ரஜினிகாந்த் தயா பவுன்டேசனும் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளார்கள். 40 ஆண்டுகாலம் ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியில் குழந்தைகளுக்கான குற்றம் 16.4 சதவீதமாக இருந்து தற்போது பாஜக ஆட்சியில் 4 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு டாக்டர் ஆனந்த் கூறினார்.