நாகா்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட போத்தீஸ் உட்பட பல நிறுவனங்களை அதிகாாிகள் பூட்டி சீல் வைத்தனா்.
நாகா்கோவில் நகராட்சியின் கலெக்டா் அலுவலகம் ரோடு, கோா்ட் ரோடு, வேப்பமூடு, மீனாட்சிபுரம் போன்ற பகுதிகள் எந்ந நேரமும் பரபரப்போடு இயங்கி கொண்டிருக்கும். இதனால் இந்த பகுதியில் பொதுமக்களும் வாகன ஒட்டிகளும் பொிதும் சிரம படுவாா்கள். இதற்கிடையில் இந்த பகுதியில் சமீப காலமாக பொிய பொிய நிறுவனங்கள் வானுயா்ந்த அளவுக்கு கட்டிடங்களை கட்டி கடைகளை நடத்தி வருகிறாா்கள். அதே போல் பொிய பொிய பங்களாக்களையும் கட்டி வருகிறாா்கள்.
இந்த நிலையில் தான் கடந்த ஓரு ஆண்டுக்கு முன் நாகா்கோவில் நகராட்சி ஆணையாளராக வந்த சரவணகுமாா் ஆக்கிரமிப்பு இடங்கள் மற்றும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டாா். இதில் வணிக நிறுவனங்கள், பாக்டாிகள்,வீடுகள் விதி முறைகளை மீறி கட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவா்களுக்கு உள்ளூா் திட்டக்குழு மற்றும் நகராட்சி சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதில் இரண்டு தினங்களுக்கு முன் கோா்ட் ரோட்டில் உள்ள பிரபல வணிக நிறுவனம் கணேஷ் சூப்பா் மாா்க்கெட் அதிகாாிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதை தொடா்ந்து நேற்று மாலை கலெக்டா் அலுவலகம் எதிரே 7 மாடி கொண்ட போத்தீஸ் ஜவுளி நிறுவனம், சூப்பா் மாா்ட், ரெஸ்டாரென்ட் பூட்டி சீல் வைத்தனா்.
அப்போது கடைக்குள் பொருட்கள் வாங்கி கொண்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் மற்றும் 300 க்கு மேற்பட்ட ஊழியா்களையும் வெளியேற்றி அந்த நிறுவனத்தை சீல் வைக்கும் போது அவா்கள் அங்கு குவிந்து நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதே போல் அந்த பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட ஒரு பங்களா வீடு மற்றும் ஹோட்டல், ரெடிமேட் கடையையும் பூட்டி சீல் வைத்தனா்.
இதே போன்று நடவடிக்கைகள் இன்னும் தொடரும் ஆணையாளா் சரவணகுமாா் கூறினாா். இதனால் இன்னும் பல நிறுவன உாிமையாளா்கள் அச்சத்தில் உள்ளனா்.