Published on 10/11/2018 | Edited on 10/11/2018

கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன். இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது கடலூர் மாவட்டம் வேப்பூர் என்ற இடத்தில் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் இருந்த காவலர்கள், சாலையில் சென்ற மினி லாரியை மறித்து பேசிக்கொண்டிருந்தனர்.
அவர்களை ரகசியமாக கண்காணித்தார் சரவணன். காவலர்கள் இருவரும் லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்ததை பார்த்த எஸ்பி அதிர்ச்சி அடைந்தார். சீருடையில் எஸ்.பி. இல்லாத காரணத்தால் காவலர்களுக்கும் அடையாளம் தெரியவில்லை. உடனடியாக எஸ்.எஸ்.ஐ. ரவிச்சந்திரன் என்பவரையும், காவலர் நந்தகுமார் என்பவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார் எஸ்.பி. இது கடலூர் மாவட்ட காவலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.