Skip to main content

பாமக வெற்றிபெரும் என்று சொன்னதைக் கேட்டேன்: இன்று இரவு நல்லபடியாக தூங்கப் போகிறேன்! டாக்டர் ராமதாஸ் பேச்சு!!

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை அதிமுக கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் பாமக வேட்பாளரான ஜோதி முத்து போட்டியிடுகிறார். அதன் அடிப்படையில் அதிமுக கூட்டணி  கட்சி சார்பில் திண்டுக்கல்லில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார்.

 

pmk Founder ramadoss election campagin  in dindugul

 

இக்கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமை தாங்கினார். அதுபோல் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன். இன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டனர்.

 

இக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்சோ.....

 

 

இங்குள்ள முன்னாள் மேயர் பேசும்போது முதல்வரும், துணை முதல்வரும் பாமகவுக்கு வடக்கே செல்வாக்கு இருக்கிறது. தெற்கே  பாமகவுக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த திண்டுக்கல் தொகுதியை ஒதுக்கி இருக்கிறார்கள் என்று சொன்னார். ஆனால் முதல்வரும், துணை முதல்வரும் சென்னார்களோ இல்லையோ அதற்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ராமதாஸ் சொல்லி முடிப்பதற்குள் மேடையில் ராமதாஸின் அருகே உட்கார்ந்திருந்த அமைச்சர் சீனிவாசன் முதல்வரும், துணை முதல்வரும் அப்படித்தான் சொல்லி இருக்கிறார்கள் என்று வெளிப்படையாக சொன்னதைக் கேட்ட ராமதாசும் அதற்கு நன்றி சொன்னார்.

 

அதன் பின் மீண்டும் பேசிய ராமதாஸ்சோ... திண்டுக்கல் தொகுதியில் பாமக நிற்குமோ என  சிலர் நினைத்தார்கள். இன்றைக்கு நீங்கள் எல்லாம் வேறு மாதிரியாக பேசி இருக்கிறதை பார்க்கும்போது ஒரு லட்சம் இரண்டு லட்சம் இல்லை 3 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறோம் என்று சொன்னதைக் கேட்கவும் தான் இன்று இரவு  நல்லபடியாக நான் தூங்கப் போகிறேன். இதை உடனே அன்புமணிக்கும், ஜிகே மணிக்கு தெரியப்படுத்துவேன். இது மூலம் பாண்டிச்சேரி உள்பட ஏழு தொகுதிகளிலும் பாமக வெற்றி பெறும் அதோடு பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சி வெற்றிபெறும். அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எல்லாம் உண்மையாக உழைப்பவர்கள். அவர்களிடம்  சூதுவாது எல்லாம் கிடையாது. ஆனால் மற்ற கூட்டணிக் கட்சிகள் மாலை போட்டு விட்டு கழுத்து அறுத்துவிடுவார்கள்.

 

 

முதன்முதலில் ஜெ.வுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றோம் அதுபோல் தற்போது மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து அதன் மூலம் இந்த மெகா கூட்டணி அனைத்து தொகுதிகளிலும்  வெற்றி பெறும்  விவசாய குடும்பத்தில் பிறந்த ஜோதி முத்துவை வேட்பாளராக இறக்கியிருக்கிறோம். இந்த திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை அப்படிப்பட்ட இந்த கோட்டையை யாரும் ஓட்டை போட முடியாது அந்த  அளவுக்கு கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள். அதில்  பாமகவுக்கு மாங்கனி சின்னம் என்றாலும் அந்த மாங்கனியின் இரண்டு பக்கமுமே இலை இருக்கிறது என்று மக்களிடம் சொல்லுங்கள். நான் அதிமுகவில் கூட்டணி வைத்தைக் கண்டு ஸ்டாலின் முதன் முதலில் வசைபாட ஆரம்பித்துவிட்டார். 

 

 

pmk Founder ramadoss election campagin  in dindugul

 

 

அங்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லை கலைஞருக்குப் பிறகு இனிமேல் அந்த கட்சி தேராது. தற்பொழுது அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இந்த அரசு மேல் கோபமாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். உங்களுடைய கோரிக்கைகளையும், குறைகளையும் தேர்தல் முடிந்தவுடன் நானே முதல்வரிடமும், துணை முதல்வருடன் பேசி நிறைவேற்றிக் கொடுக்கிறேன் என்று கூறினார்.

 

 

இக்கூட்டத்தில் பாமக மாநில பொருளாளர் திலகபாமா மற்றும் மாவட்ட தலைவர் பரசராமன் உள்பட மாநில பொறுப்பாளர்கள் சிலர் வந்திருந்தனர் அதுபோல் கூட்டணி கட்சியில் உள்ள தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, கிழக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்பட கூட்டணி கட்சி பொறுப்பாளர்களும் அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

 

 

இக்கூட்டத்திற்கு கட்சிக்கார்களோடு பொதுமக்களை டோக்கன் அடிப்படையிலும் அழைத்து வந்து இருந்தனர். ஆனால் ஆரம்பத்தில் இருந்த கூட்டம் நேரம் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடைசியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசும்போது பொது மக்களின் கூட்டமும் குறைந்து பெரும்பாலான  இருக்கைகள் வெறிச்சோடிதான் காணப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்