Skip to main content

பெரியார் சிலை இடிப்பு - திருச்சி ஆர்.எஸ்.எஸ் தென்மண்டல அலுவலகம் இழுத்து மூடும் போராட்டம்!

Published on 07/03/2018 | Edited on 07/03/2018
protest

திரிபுராவில் வெற்றி பெற்ற 48 மணி நேரத்துக்குள் பெலோனியா என்ற நகரில் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலையை புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளி, “பாரத்மாதா கி ஜெய்” என்று முழக்கமிட்டு கூத்தாடியிருக்கின்றனர் சங்க பரிவாரக் காலிகள். வீழ்த்தப்பட்ட சிலையின் தலையை மட்டும் தனியே துண்டித்து கால்பந்து விளையாடினர் என்றும் கூறுகிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் செய்தி. “இன்று திரிபுராவில் லெனின் சிலை நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவெராவின் சிலை” – இது முகநூலில் எச்.ராஜாவின் பதிவு.
 

protest 2


திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் தாக்கப்படுகின்றனர். அவர்களது அலுவலகங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. வீடுகள் கொளுத்தப்படுகின்றன. இதுவரை 514 தொண்டர்கள் தாக்கப்பட்டிருப்பதாகவும், 1539 வீடுகள் சூறையாடப்பட்டிருப்பதாகவும், 196 வீடுகள் எரிக்கப்பட்டிருப்பதாகவும், 208 கட்சி அலுவலகங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், 64 அலுவலகங்கள் எரிக்கப்பட்டிருப்பதாகவும் திரிபுரா மாநில மார்க்சிஸ்டு கட்சித் தலைமை குற்றம் சாட்டியிருக்கிறது.
 

protest 3


இந்தநிலையில் எச்.ராஜாவின் இந்த பேச்சை கண்டித்து திருச்சியில் ஆர்.எஸ்.எஸ். தென்மண்ட அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டமும், மோடி, எச்.ராஜா கொடும்பாவி எரிப்பு போரட்டமும் திருச்சியில் நடைபெற்றது. உறையர் ஜெயந்தி பேருந்து நிலையம் அருகில் மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்தவர்கள், பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் என 100 பேருக்கு மேல் திரண்டு வந்த மோடி, எச்.ராஜா ஆகியோரின் பேனர்களை எரித்து அலுவலத்தை மூடுவதற்கு பேரணியாக திரண்டு சென்ற போது உறையர், மற்றும் தில்லைநகர் போலிசார் அவர்களை கைது செய்தனர்.

சார்ந்த செய்திகள்