Skip to main content

கடற்புலிகள் இல்லை... இலங்கை வழியாக பயங்கரவாதிகள் ஊருவல்... கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனை தீவிரம்!

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

இலங்கை கடலில் கடற்புலிகள் இல்லாத நிலையில் தற்போது அடிக்கடி கடத்தல்கள், பயங்கரவாதிகள் ஊடுருவல் என்று இந்தியாவுக்கான அனைத்து அச்சுருத்தல்களும் தமிழ்நாட்டு கடல் வழியாகவே தொடங்கியுள்ளது. தற்போது 6 பயங்கரவாதிகள் இலங்கை வழியாக தமிழ்நாட்டில் கோவையில் ஊடுருவியுள்ளதாக கூறி கார்களின் எண்கள், 3 பேரின் படங்களையும் போலிசார் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில்தான் கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகனச் சோதனைகள் தீவிரமடைந்துள்ளது.

 

police

 

விடுதலைப்புலிகள் கடலில் பாதுகாப்புக்கு சுற்றி வரும்போது இந்தியா பாதுகாக்கப்பட்டது. அவர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டு கடல் வழியாக எந்த அச்சுருத்தலையும் செய்ய முடியவில்லை. இனி அவர்கள் இல்லை என்பதால் பயங்கரவாதிகளும், எதிரி நாடுகளின் அச்சுருத்தல்களும் தமிழக கடலவழியாகவே நடக்கும் என்று பன்னாட்டு கூட்டு சதியால் விடுதலைப்புலிகளையும், ஈழத்தமிழர்களையும் கொன்று குவித்தபோது ஒரு முன்னாள் கடற்படை வீரர் சொன்னார். அவர் சொன்னது போலவே நடக்க தொடங்கி உள்ளது.

அதாவது சர்வதேச கடத்தல்கள் அனைத்தும் இலங்கை வந்தே வெளியேற்றப்படுகிறது. போதைப் பொருட்கள், தங்கம் அனைத்தும் இலங்கை வழியாகவே வெளியேறும். 10 ஆண்டுகளுக்கு முன்புவரை இலங்கைக்கு பெண்களை சிறு வியாபாரிகளாக அழைத்துச் சென்ற கடத்தல்காரர்கள் அங்கிருந்து திரும்பி வரும் போது தங்கம் போன்ற கடத்தல் பொருட்களை கருப்பு கார்பன் பேப்பர்களில் சுற்றி பெண்களின் மர்ம உறுப்புகளில் மறைத்து வைத்து விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பினார்கள். கருப்பு கார்பன் பேப்பர் விமான நிலையங்களில் உள்ள ஸ்கேனர்களில் தெரியாது என்பதால் அப்படி செய்யப்பட்டது. அந்த பெண்கள் விமானநிலையத்தில் இருந்து வெளியே வரும்போது அவர்களுக்கு கொடுக்கப்படும் தகவல்களின் படி அந்த கடத்தல் பொருள் கொண்டு போய் சேர்க்கப்படும். இதற்காக அவர்களுக்கு ஒரு முறை சென்று வர பயணக்கட்டணம் போக ரூ. 5 ஆயிரம் வரை சன்மானம் வழங்கப்பட்டது. 

 

police

 

அதன் பிறகு கடலில் கடற்புலிகள் இல்லை என்ற நிலையில் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களும், தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களும் தமிழக கடல் வழியாக இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதேபோல கஞ்சா வாங்க இலங்கையில் இருந்து பலர் சொந்த விசைப் படகுகளில் வந்துதங்கி இருந்து வாங்கிச் சென்றனர். இப்படி அடிக்கடி கடத்தல் வணிகம் இந்திய கடலில் நடக்கத் தொடங்கியது. வேதாரண்யம் அருகே கஞ்சாவுக்கு பணம் கொடுக்கவில்லை என்று இலங்கை இளைஞர் ஒருவரை தனிமைச் வீட்டுச்சிறையில் 18 மாதங்கள் வைத்திருந்த சம்பவம் சில மாதங்களுக்கு முன்புதான் நடந்தது. 

இப்படி அடிக்கடி கடத்தல் சம்பவங்கள் கடற்கரையில் நடக்கிறது. ஆனாலும் சில காவல் துறையினர் அவற்றை விரட்டிப் பிடிக்கத்தான் செய்கிறார்கள். அதையும் மீறி இப்படி நடந்துவிடுகிறது. இந்த நிலையில்தான் தற்போது இலங்கையை சேர்ந்த 5 பேர், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் என 6 பேர் கொண்ட பயங்கரவாதிகள் இலங்கையில் இருந்து தமிழக கடல்வழியாக வந்து தமிழ்நாட்டு பதிவு  எண் கொண்ட கார்களில் கோவை மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ளனர் என்ற தகவலை காவல் துறையினர் படங்களுடன் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த தகவலையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, திருப்புனவாசல் உள்ளிட்ட கடலோர பாதுகாப்பு குழும போலிசார் ஆய்வாளர் அன்னலட்சுமி, உதவி ஆய்வாளர்கள் ஜவகர், ராஜ்குமார் மற்றும் போலிசார் மும்பாலை சோதனைச் சாவடியில் சாலைகளில் தீவிர வாகன சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் கோடியக்காடு, அம்மாபட்டிணம் பகுதியலும், கடலுக்குள்ளும் ரோந்துப் பணிகளில் தீவிரம்காட்டியுள்ளர். இதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் கடலோரங்களில் தீவிர சோதனைகள் செய்யப்பட்டு வருவதுடன் உள் மாவட்டங்களிலும் முக்கிய சாலைகள், முக்கிய இடங்களிலும் சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்