Skip to main content

முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

Published on 15/06/2022 | Edited on 15/06/2022

 

vMuslim League parties struggle

 

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி திருச்சி அரியமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்டச் செயலாளர் மஹது தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் காஜா முகைதீன், பொதுச் செயலாளர் ஜாவித் உசேன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். அப்போது, 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்யத் தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


   

   

 

சார்ந்த செய்திகள்