![Stali](http://image.nakkheeran.in/cdn/farfuture/fxG8uCK1B53RXYpd2b1jjYDvhSxjhfl2yj1-Zo_hu7w/1533347634/sites/default/files/inline-images/Stali.jpg)
மு.க.ஸ்டாலின் குறித்து மதிமுகவினர் விமர்சிக்க கூடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பினாங்கில் இருந்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்தோ, நம் இயக்கத் தோழர்கள் முகநூலிலோ இணையதளத்திலோ, வாட்ஸ் அப்பிலோ, சமூகவலைதளங்களிலோ எந்த விமர்சனமும் செய்யக் கூடாது.
அப்படிச் செய்பவர்கள் ம.தி.மு.க. நலனுக்கு பெருங்கேடு செய்பவர்கள் ஆவார்கள். இதனை மீறிச் செயல் படுகின்றவர்கள் ம.தி.மு.க.வினராவோ, ஆதரவாளர்களாகவோ, பற்றாளர்களாகவோ கருதப்பட மாட்டார்கள். ம.தி.மு.க.வுக்கும் அவர்களுக்கும் எள்அளவு தொடர்பும் இல்லை என அவர் கூறியுள்ளார்.