தமிழகத்தில் மேலும் இரு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் தமிழக மக்கள், அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில் தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். ஒரே ஆண்டில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது வரலாற்றுச் சாதனை என்று முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழக அரசின் பங்காக ரூபாய் 1,430 வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதனிடையே புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "விடுபட்ட மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே அறிவித்த ஆறு மருத்துவக்கல்லூரிகளுக்கு ஓரிரு வாரங்களில் முதல்வர் அடிக்கல் நாட்டுவார். புதிய மருத்துவக்கல்லூரிகள் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்." இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.