19 வயது இளைஞரின் படுபாதகச்செயலால் 16 வயது சிறுமி குழந்தை பெற்றாள். பெற்றோர் எதிர்த்ததால் கூடிவாழ மறுத்து சிறைசென்றார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மெய்யாத்தூர் கிராமத்தை சேர்ந்த உஷாராணி கணவர் இல்லாததால் தனது இரு மகள்களையும் ஊரில் தங்கவைத்து விட்டு திருப்பூரில் கூலி வேலை செய்து வருகிறார். 16 வயதுடைய இவரது மூத்தமகள் சிதம்பரத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியிலுள்ள விளத்தூர் கிராமத்தை சேர்ந்த வேறு சமூகத்தை சார்ந்த ராகுல்(19) என்ற இளைஞர் அந்த மாணவியிடம் தொலைபேசி மூலம் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டு கடந்த ஒன்னரை வருடமாக காதலிக்கிறேன், உன்னை தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று ஆசை வார்த்தைகளை அள்ளிவீசி மாணவியை வலுகட்டாயமாக ஏமாற்றி தனிமையில் இருந்து வந்துள்ளான். இதனால் மாணவி கர்ப்பம் அடைந்த விபரத்தை அவனிடம் கூறியபோது உன்னை கைவிடமாட்டேன் இதையாரிடமும் சொல்லவேண்டாம். இதன் மூலம் நமது திருமணம் நடக்கும் என்று ஆசை வார்த்தையை கூறியும் பலமுறை தனிமையில் இருந்துள்ளான் .
மாணவியின் தாய் வெளியூரில் இருந்ததால் இதுகுறித்து சொன்னால் பிரச்சனையாகிவிடுமோ என்று பயந்து மாணவி சம்பவத்தை மறைத்து வந்துள்ளார். கடந்த 30-ந்தேதி மாணவிக்கு வயிற்று வலி அதிகமாகியுள்ளதால் அவரது உறவு வழி பாட்டி ஒருவரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். அவர் பார்த்துவிட்டு உடனே ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆட்டோவில் செல்லும் போதே மாணவிக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. அதனை தொடர்ந்து தாயும் சேயும் குமராட்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிவித்ததின் பேரில் மாணவியின் தாய் சம்பவ இடத்திற்கு வந்து பிள்ளைகள் நல்லா படிக்க வேண்டும் என்று தானே பல மைல் தான்டி பட்டினி கிடந்து கூலிவேலை செய்து வந்தேன். என் பிள்ளையை ஆசை வார்த்தை கூறி சீறழிச்சிட்டாங்களே என்று அழுது புலம்பியது அங்கிருந்தவர்களின் நெஞ்சை வருடியது.
மேலும் என் பிள்ளையை கலங்கப் படுத்தியவனுடன் வாழவைக்கவேண்டும். எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம். என்று சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார்கொடுத்துள்ளார்.
காவல்துறையினர் சம்பந்தபட்ட இளைஞரை அழைத்து விசாரணை செய்த போது இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று பெற்றோர் பேச்சை கேட்டுகொண்டு மறுத்துள்ளார். பின்னர் விசாரணையில் இவன் மீது தவறு உள்ளதை அறிந்த காவல்துறை அவளுடன் குடும்பம் நடத்துகின்றாயா என்றதுக்கு, நான் ஜெயிலுக்கே போகிறேன் அவ தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் யாரும் ஏத்துக்கமாட்டாங்க என்று கூறி போக்ஸோ சட்டத்தில் சிறைக்கு சென்றுள்ளான்.
மாதர் சங்க கடலூர் மாவட்ட செயலாளர் தேன்மொழியோ, சம்பந்தபட்டவரின் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து உறுதிபடுத்தி ஒன்றாக வாழ நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அவர்களின் வாழ்வாதாரத்தை அரசு உறுதிபடுத்த வேண்டும். மாணவிக்கு சரியான நடவடிக்கை இல்லையென்றால் மாதர் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெறும் என்றார்.