Skip to main content

கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல்

Published on 15/12/2017 | Edited on 15/12/2017
கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; 
நாகை விவசாயிகள் சாலைமறியல் 



அனைக்கரை கீழனையில் இருந்து பிரிந்து வரும் கும்கி மண்ணி ஆற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

நாகை மாவட்டம்    திருச்சிற்றம்பல்லம், கடலங்குடி, பூதங்குடி, ஆத்தூர் கேசிங்கன், புத்தமங்கலம், காவளமேடு, நமச்சிவாயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் கும்கி மண்ணி ஆற்றின் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. 

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் , இதுவரை கும்கி மண்ணிஆறு மற்றும் மண்ணியாறுகளில் தண்ணீர் வரவில்லை பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் மின்மோட்டார் மூலம் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும், ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள்  சாகுபடி செய்ய முடியாமல் கிடக்கிறது. அதோடு குடிநீருக்கான நிலத்தடி நீரும் உயரவில்லை. இவ்வளவு மழையிலும் ஆற்றில் தண்ணீர் வரவில்லை.
      இந்நிலையில் நேற்று பாசனத்திற்கு கும்கி மண்ணி மற்றும் மண்ணியாற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். கொள்ளிம் ஆற்றில் ஆதனூருக்கும் குமாரமங்கலத்திற்கும் இடையே தடுப்பணை கட்ட வேண்டும். திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய மணல்குவாரி திறக்க பாதை அமைப்பதை ரத்து செய்ய வேண்டும் என்ன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பொதுமக்களும் விவசாயிகளும் கடலங்குடி மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை தாசில்தார் காந்திமதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் கும்பகோணம் சீர்காழி செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

- க.செல்வகுமார்

சார்ந்த செய்திகள்