சமீபகாலமாக குமாி மாவட்டத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடா்ந்து நடக்கிறது. இதில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் பெரும்பாலானோா் கஞ்சாவுக்கு அடியைமானவா்களாகவே உள்ளனா். இதற்கு காரணம் தற்போது கஞ்சா விற்பனை குமாி மாவட்டத்தில் கொடிகட்டி பறக்கிறது. இதைத்தடுக்க வேண்டிய போலிசாரே மெத்தனமாக இருந்து வருகிறாா்கள். இதனால் கொலை சம்பவத்தில் கஞ்சாவுக்கு அடிமையான பள்ளி, கல்லூாி மாணவா்களும் ஈடுபடுகின்றனா்.
இந்நிலையில் நாகா்கோவில் பறக்கை மாவிளை காலனியை சோ்ந்த இராஜாக்கமங்கலம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகா் புஷ்பாகரன்(40) கடந்த 5-ம் தேதி 5 போ் கொண்ட கும்பலால் ஓடஓட விரட்டி கொலை செய்யப்பட்டாா். இந்நிலையில் கொலையாளிகளை தனிப்படை போலிசாா் தேடி வந்த நிலையில் நேற்று மாலை பறக்கை பகுதியை சோ்ந்த கிஷோா் குமாா்(18), மாதேஷ் கண்ணன்(18), குளத்தூரை சோ்ந்த சஞ்ஞய்குமாா்(19), சஜன்(20) ஆகிய 4 போ் தக்கலை டிஎஸ்பி காா்த்திகேயன் முன்னிலையில் சரணடைந்தனா்.
இதில் 5-ஆவது குற்றவாளியான கிஷோா் குமாாின் சகோதரா் பிரச்சனா தலைமறைவாகியுள்ளான். மோட்டாா் சைக்கிள் மீது மோதியதால் ஏற்பட்ட விரோதத்தில் புஷ்பாகரனை கொலை செய்ததாக கொலையாளிகள் கூறியுள்ளனா். இதில் கிஷோா்குமாரும், சஞ்சய் குமாரும் கல்லூாி மாணவா்கள். இவா்கள் 5 பேரும் ஒன்றாக சோ்ந்து கஞ்சா அடிப்பதும் போலிசாா் விசாரணையில் தொிவித்தனா்.