
குமரி மாவட்ட மீனவா்கள் குறை தீா்க்கும் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரா தலைமையில் நடந்த கூட்டத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவபிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முக்கியமாக கரைமடி மீனவா்கள் பயன்படுத்தும் கீச்சான் பூச்சான் மீன்வலையை தடைசெய்வது சம்மந்தமாக விவாதிக்கப்பட்டது. விவாதத்தில் அந்த மீன்வலையை தடைசெய்வதால் கரைமடி மீனவா்களின் பாதிப்பை மீனவ பிரதிநிதிகள் விளக்கமாக பேசினார்கள். அவா்களின் விவாத பேச்சை கேட்ட கலெக்டர் கீச்சான் பூச்சான் வலையை இனி மீனவா்கள் பயன்படுத்த கூடாது. அதையும் மீறி பயன்படுத்தினால் அந்த மீனவா்கள் மீது மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பார்கள் என எச்சரித்தனர். இதை கேட்டு மீனவா்கள் கூட்ட அரங்கிலே ஆத்திரத்துடன் சலசலப்பை ஏற்படுத்தினார்கள்.
இதை தொடா்ந்து கலெக்டரின் பேச்சால் ஆத்திரமடைந்த மீனவபிரதிநிதிகள் கலெக்டரை முற்றுகையிட்டு விசை படகு மீனவா்களுக்கு ஆதரவாக நீங்கள் பேசுகிறீர்கள் கரைமடி மீனவா்களின் நிலைமைகளை அரசும் அதிகாரிகளும் புரிந்து கொள்ளவில்லை என ஆத்திரத்தை கொட்டி கலெக்டரை முற்றுகையிட்டு அந்த மீனவா்களுக்கும் முடிவை அறிவித்து விட்டு செல்லுங்கள் என்று கூறி முற்றுகையிட்டனர். இதனால் கலெக்டா் கூட்டம் முடிந்தும் போக முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடா்ந்து அது அரசின் உத்தரவு அதனால் எனக்கு இரண்டு நாட்கள் தாருங்கள் நான் அரசிடம் பேசி நல்ல முடிவை சொல்லுவதாக கூறியதையடுத்து மீனவ பிரதிநிதிகள் கலெக்டரை விடுவித்தனர். இது கலெக்டா்அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.