Published on 16/11/2018 | Edited on 16/11/2018
கஜா புயல் நாகப்பட்டினம் - வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. கஜா கரையை கடந்தபோது 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்தன. மின்சாரமும், தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளன. புயல் வீசிய நேரத்தில் இருந்து 10 நேரத்திற்கும் மேல் வேதாரண்யம் பகுதியே தனி தீவு போல் ஆகிவிட்டது. அங்கே நிலைமை எப்படி என்றே தெரியாமல் இருந்தது.
வேதாரண்யத்தில் சேதம் அதிகமாக இருக்கிறது. கோடியக்கரை சரணாலயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பறவைகளும், மான்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. ஆறுகாட்டுத்துறை கடற்கரை அருகே 20க்கும் மேற்பட்ட மான்கள் உயிரிழந்துள்ளன. அரியவகை கடல்வாழ் ஜெல்லி மீன்களும் உயிரிழந்து கரை ஒதுங்கின.